வம்பு, வசவு, களிப்பு, கண்ணீர்,
வாய்ச் சண்டை,
வலுச் சண்டை
வரவேற்க வரவைத்த போலி புன்னகை,
தரங்கெட்ட மனிதர்,
தவறான சேர்க்கை,
தொலைவின் எதிர்விகிதம் தொல்லை, சிக்கல்கள்,
விலைபோகும் நன்றிகள்,
விலைகேட்கும் உதவிகள்,
வேண்டாத பேச்சுகள்,
வேதனைபெரு மூச்சுகள்,
காண்கின்ற கண்களை ஏமாற்றும் கானல்கள்,
பரிவு வேண்டினால் பரிகசிக்கும் உலகு-நம்
சரிவு வருமிடத்து மகிழும் உள்ளங்கள்,
பிரிவு நம்மை இவற்றில் பிரிப்பதால்,
பிரிவு கள்கூட பிரியத்துக் குரியவை!!
No comments:
Post a Comment