அடிநாள் தொட்டு அவனியின் தந்தை
அவனெனக் கூறிய ஆக்கங்கள்
அழிய,
விடிவான் வெள்ளிபோல் விஞ்ஞானம் விடைபகர,
விழுதாய் தாங்கிநின்ற
பொய்மையெலாம் அடிசாய,
சாத்திரங்கள் நாட்டி வைத்த அடிமைமுறைச் சாக,
சாதிமதச் சார்புகள்
சவக்குழிக்குப் போக,
ஏழ்மை நிலையெல்லாம் எழுத்தல்ல எனஉணர,
‘இன்று நாள் எப்படி’கள்
இறப்பைத் தேட,
வசிப்பதாய்ச் சொன்ன வான்நோக்கி மனிதன்வர,
வரமெனச் சொன்னதை வலுவிலா
அவன்செய்ய,
கருணைகொண்ட சுற்றாடல் சட்டென கழுத்துநெரிக்க,
கடைசிமூச்சு விட்டு கடவுள்
செத்துப்போனார்!
No comments:
Post a Comment