ஆறாகக் கண்கள்,
ஆறாதப் புண்கள்,
தீராத வலியோடு தீனமாக
அலறும் நினைவு!
தொட்டிலைத் துறக்க மறுத்த மனம்
விட்டிலை போல்
வீட்டைச் சுற்ற,
விடியலில்
விழிக்கையில் வெருட்டி நின்ற
கொடிதானப் பள்ளியும்
சடுதியில் பழகிப்போக,
அடிநாள் வசந்தத்தின்
மலரான நட்பு வாட,
“அன்பால் பிரியாமல்
ஊழிவரை உற்றிருப்போம்”,
என்பதாய்ச் சொன்ன
இறைநட்பு இறந்துபோக,
இடைவேளை மறந்துபோன
மரணங்கள் மரத்துப்போக
இடையறாது கலந்துகொண்ட
போட்டிகளும் இயல்பாய்மாற
விடைதெரியா
வினாக்களோடு வாழ்வெனும் வினாத்தாளில்
விசும்பலாய் நின்றன
இவற்றின் தாக்கங்கள் மட்டும்!!
No comments:
Post a Comment